Home இலங்கை அரசியல் வன்னியில் அறுவரை தெரிவு செய்ய 423 பேர் களத்தில்

வன்னியில் அறுவரை தெரிவு செய்ய 423 பேர் களத்தில்

0

நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி (vanni)மாவட்டத்தில் 47 கட்சிகள் மற்றும் சுயேட்சைகுழுக்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், 4 குழுக்களின் விண்ணப்பங்கள் நிராகரிகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபரும் தேர்தல் தெரிவித்தாட்சி அலுவலருமான சரத்சந்திர தெரிவித்தார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்று (11) மதியம் 12 மணி அளவில் நிறைவுக்கு வந்திருந்தது.

அந்தவகையில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

 இம்முறை வன்னி தேர்தல் மாவட்டத்தில் 24 அரசியல் கட்சிகளும் 27 சுயேட்சைக் குழுக்கள் என மொத்தமாக 51 குழுக்கள் வேட்பு மனுக்களை கையளித்திருந்தன.

 51 குழுக்கள் வேட்பு மனு தாக்கல்

அவற்றில் 2 அரசியல் கட்சிகள் மற்றும் 2 சுயேட்சை குழுக்களினது விண்ணப்பங்கள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படாத காரணத்தினால் தேர்தல் அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக எங்கள் மக்கள் சக்தி மற்றும் சிறிரெலோ கட்சியின் ப. உதயராசா போட்டியிடவிருந்த ஜனநாயக தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளின் வேட்பு மனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன.

 423 வேட்பாளர்கள் களத்தில் 

அந்தவகையில் 47 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார்.

இதேவேளை 2024 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்தலில் 6 நாடாளுமன்ற ஆசனங்களை பெற்றுக்கொள்வதற்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் 423 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version