ஒரே பதிவுச் சான்றிதழைக் கொண்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களை விற்ற இரண்டு பேரும், போலி ,யந்திர எண்களை வைத்திருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டதாக வாரியபொல காவல்துறையின் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது
மோட்டார் சைக்கிள்களைத் திருடி, அவற்றை வேறு பதிவு எண்களாக மாற்றி, அந்த ஆவணங்களில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் இயந்திர மற்றும் அடிச்சட்ட எண்களை மாற்றுவதன் மூலம் அவர்கள் சிறிது காலமாக ஒரு மோசடியில் ஈடுபட்டதாக காவல்துறை கூறுகிறது.
மூவரில் இருவர் கைது
காவல்துறைக்கு கிடைத்த புகாரைத் தொடர்ந்து, வாரியபொல காவல் பிரிவின் பண்டார கொஸ்வத்த பகுதியில் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்த மூவரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே பதிவு எண்ணைக் கொண்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பிரதான சூத்திரதாரியும் கைது
கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்திய விசாரணையின் போது, போலி இயந்திர மற்றும் அடிச்சட்ட எண்களை மாற்றும் நபரையும், அதற்காகப் பயன்படுத்தப்படும் கருவிகளின் தொகுப்பையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குருநாகல், போயகனே, மல்கடுவாவ மற்றும் வாரியபொல பண்டாரகோஸ்வத்த பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.
