வணங்கான்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் அருண் விஜய். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் வணங்கான்.
பாலா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் அருண் விஜய்யின் நடிப்பு வித்தியாசமாக இருந்தது. மேலும் அவர் மாற்றுத்திறனாளியாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் சொந்தமாக்கியுள்ளார்.
பணப்பெட்டி டாஸ்க்கில் தோல்வி.. சற்றுமுன் எலிமினேட் செய்யப்பட்ட முக்கிய போட்டியாளர்! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்
இப்படத்தில் அருண் விஜய்யின் நடிப்பு பல சினிமா நட்சத்திரங்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இவரை தவிர்த்து படத்தில் அறிமுக நடிகைகளான ரோஷினி மற்றும் ரிதா ஆகியோர் நடிப்பும் பாராட்டப்பட்டது.
மாஸ் வசூல்
இந்நிலையில், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வரும் வணங்கான் திரைப்படம் உலகளவில் 6 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 6 நாட்களில் ரூ. 7 கோடி வசூல் செய்துள்ளது.