Home சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த அகத்தியா படத்தின் OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா?

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த அகத்தியா படத்தின் OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா?

0

அகத்தியா

தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோக்களில் ஒருவர் ஜீவா. இவர் ராம், கற்றது தமிழ், கோ, நண்பன் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த பிளாக் திரைப்படமும் வெளிவந்து நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது.

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் அகத்தியா. இப்படத்தை பாடலாசிரியரும், இயக்குநருமான பா. விஜய் இயக்கியுள்ளார்.

20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்த எம்.குமரன் Son Of மகாலக்ஷ்மி பட கூட்டணி.. வைரல் போட்டோ

மேலும் இப்படத்தில் ஜீவாவுடன் இணைந்து ராஷி கன்னா, அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரர் அட்வென்ச்சர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் மக்களிடையே ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

எப்போது தெரியுமா? 

இந்நிலையில், இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வரும் மார்ச் 28 ம் தேதி சன் நெக்ஸ்ட் OTT தளத்தில் வெளியாகவுள்ளது. தற்போது இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.  

NO COMMENTS

Exit mobile version