Home இலங்கை அரசியல் சம்பளத்தில் 4 இலட்சத்தை நிவாரணத்திற்காக ஒதுக்கிய அர்ச்சுனா எம்.பி…!

சம்பளத்தில் 4 இலட்சத்தை நிவாரணத்திற்காக ஒதுக்கிய அர்ச்சுனா எம்.பி…!

0

தங்கள் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் நான்கு இலட்சம் பெறுமதியில் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, வடக்கில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பில் எந்த அரச அதிகாரிக்கு எவ்வாறு நிதி கொடுக்கப்பட்டது மற்றும் எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த நிதி பகிரப்பட்டது என்பது தொடர்பில் ஒழுங்கான முறையில் தரவுப்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் ஜனாதிபதியிடமும் தனது கோரிக்கையை இதன்போது முன்வைத்திருந்தார்.

இந்தநிலையில், தங்கள் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் நான்கு இலட்சம் பெறுமதியில் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளதாக தெரிவித்த அவர், இதன்பின்பும் உதவி தேவைப்படும் சந்தர்ப்பங்களில் உதவுவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

https://www.youtube.com/embed/iv4TjJj9eOc

NO COMMENTS

Exit mobile version