Home இலங்கை அரசியல் சிஐடியில் இருந்து வெளியேறினார் தயாசிறி ஜயசேகர எம்பி

சிஐடியில் இருந்து வெளியேறினார் தயாசிறி ஜயசேகர எம்பி

0

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

சுமார் மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் அவர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளிக்க முன்னிலையாகி இருந்தார்.

பணம் பெறுதல் 

ஜனாதிபதி நிதியிலிருந்து பணம் பெறுதல் மற்றும் சர்ச்சையை கிளப்பிய 323 கொள்கலன் விடுவிப்பு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் முன்னிலையாகியிருந்தார்.

இந்தநிலையில், வாக்குமூலம் வழங்கிய பின் மாலை அவர் திணைக்களத்திலிருந்து வெளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version