தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு (Gajendrakumar Ponnambalam) நாடாளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்த வகையில், நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (02) சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardana) தலைமையில் கூடிய போதே இது தொடர்பில் முன்மொழியப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், பிரதான நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்ததையடுத்து எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்லவினால் (Lakshaman Kiriella) கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ஜூலை 2 ஆம் திகதியிலிருந்து 3 மாத காலங்களுக்கு விடுமுறையளிக்குமாறு முன்மொழியப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய மக்கள் முன்னணி
அந்தவகையில், இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைச்சரான செல்வராசா கஜேந்திரன் (Selvarajah Kejendran) வழிமொழிந்துள்ளார்.
இதனையடுத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நாடாளுமன்றத்தினால் மூன்று மாதங்களுக்கு விடுமுறை வழங்க சபை இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.