இலங்கையின் 10வது நாடாளுமன்றத்தின் பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் (COPF) தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் (SJB) ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் நியமனம் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவினால் இன்று (18) நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தவிர ஹர்ஷன சூரியப்பெரும, ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன் மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் குழுவில் பணியாற்ற தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.