Home முக்கியச் செய்திகள் விபத்தில் சிக்கிய இளங்குமரன் எம்.பி : நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர் ஹரினி

விபத்தில் சிக்கிய இளங்குமரன் எம்.பி : நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர் ஹரினி

0

புதிய இணைப்பு

விபத்தில் சிக்கி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை பிரதமர் ஹரினி அமரசூரிய சற்று முன் பார்வையிட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்ற பிரதமர் ஹரினி அமரசூரிய இளங்குமரனின் உடல் நிலைமை தொடர்பில் வைத்தியர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபவானந்தராஜா, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  

முதலாம் இணைப்பு

யாழில் விபத்துக்குள்ளான இளங்குமரன் எம்.பி: வைத்தியசாலையில் அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் (Karunananthan Ilankumaran) விபத்தில் சிக்கி
படுகாயமடைந்துள்ளார்.

சாவகச்சேரி – தனக்கிளப்பு பகுதியில் இன்றையதினம் (15) இந்த விபத்து சம்பவித்துள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்து சம்பவித்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர், அவரது உதவியாளர் மற்றும் வாகனத்தின் சாரதி காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், யாழ்ப்பாணம் நோக்கி தனது வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளையே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விபத்து தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

https://www.youtube.com/embed/6QTaapodL6w

NO COMMENTS

Exit mobile version