ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு எதிர்க்கட்சியில் இணைய தீர்மானித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (2.8.2024) விசேட உரை ஒன்றை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் எதிர்காலத்திற்காகவும் பொருளாதாரத்திற்காகவும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவளிப்பதாகவும் கருணாதாச கூறியுள்ளார்.
பொதுத் தேர்தல்
கருணாதாச கொடித்துவக்கு 2020 ஆம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருந்தார்.
இதன்போது அவர் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு 114319 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
பதவி விலகல்
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் (sjb) இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள (Thalatha Athukorala) தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக இன்று (21) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு (ranil wickremesinghe) ஆதரவளிக்கும் நோக்கிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.