Home இலங்கை சமூகம் மூதூர் மக்களுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட குகதாசன் எம்.பி

மூதூர் மக்களுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட குகதாசன் எம்.பி

0

 திருகோணமலை (Trincomalee) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் (S. Kugadhasan) மூதூர் மக்களுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த நிகழ்வானது இன்று (07) புளியடிச்சோலை கங்குவேலி சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் சங்காபிசேகத்திற்கு சென்ற போது இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பிரதேசத்தில் நிலவும் குறைபாடுகள் பிரதேச அபிவிருத்தி தொடர்பிலும்
எதிர்காலத்தின் அபிவிருத்தி தொடர்பிலும் குகதாசன் மக்களிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

தேர்தல் காலம்

இக் கிராமத்துக்கு உதவிகளை செய்ய வேண்டிய நிலையில் உள்ளபோதும் தற்போது தேர்தல்
காலம் என்ற படியால் தேர்தலின் பின் உதவிகள் வழங்கப்படும் என நாடாளுமன்ற
உறுப்பினர் ச.குகதாசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தங்கள் கிராமத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகளை தீர்க்க எதிர்காலத்தில்
நடவடிக்கை எடுப்பேன் ஜனவரி மாதத்தின் பின் வரவு செலவு திட்டத்தின் பின்னரான காலப்
பகுதியில் அபிவிருத்தி வேலைகளை ஆரம்பிக்க முடியும் என இலங்கை தமிழரசு
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் இதன் போது கூறியுள்ளார்.

இந்த மக்கள் சந்திப்பின் போது, இலங்கை தமிழரசு கட்சியின் (ITAK) உள்ளூராட்சிமன்ற முன்னால் உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/mp-kugathasan-visits-moothoor-1725706020

NO COMMENTS

Exit mobile version