Home இலங்கை அரசியல் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணி விபரங்களை வழங்குமாறு அரச தரப்பு எம்.பி கோரிக்கை

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணி விபரங்களை வழங்குமாறு அரச தரப்பு எம்.பி கோரிக்கை

0

இராணுவம் மற்றும் கடற்படையின் ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களின் காணி விபரங்களை எம்மிடம் ஒப்படைத்தால் அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ. திலகநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று(27.01.2025) ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த காலத்தில் இராணுவத்தினர் தமது தேவைக்காக வன்னிப் பிரதேசத்தில் கையகப்படுத்திய பிரதேசங்களை படிப்படியாக எமது அரசாங்கம் விடுவித்து வருகின்றது.

ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் 

கடந்த காலங்களிலும் இவ்வாறான காணிகளை எமது அரசாங்கம் விடுவித்திருந்தது. கடந்த வாரமும் இராணுவம் மற்றும் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் தொடர்பான விபரங்களை சேகரித்திருந்தது.

எனவே, அவ்வாறு கையகப்படுத்தப்பட்ட இடங்கள் இருக்குமாக இருந்தால் அது தொடர்பான விபரங்களை எமக்கு தந்து உதவுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்.

அவ்வாறான இடங்களை மிக விரைவில் விடுவித்து மக்களுடைய பாவனைக்கு வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version