Home இலங்கை அரசியல் ஜேவிபியால் கொல்லப்பட்டவர்களின் பட்டியல் ஒன்றை சபையில் பகிரங்கப்படுத்திய எம்.பி

ஜேவிபியால் கொல்லப்பட்டவர்களின் பட்டியல் ஒன்றை சபையில் பகிரங்கப்படுத்திய எம்.பி

0

மக்கள் விடுதலை முன்னணியால் (ஜே.வி.பி) படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) உறுப்பினர்கள், தலைவர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் பெயர்களைக் கொண்ட பட்டியலை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி குமாரி விஜேரத்ன (Rohini Kumari Wijerathna) வெளியிட்டுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட போதே இவர் குறித்த பட்டியலை தாக்கல் செய்துள்ளார்.

அரசியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை ஆவணப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியைத் தொடர்ந்து, 1300 பெயர்களைக் கொண்ட இந்தப் பட்டியல் நாடாளுமன்ற அமர்வின் போது வழங்கப்பட்டுள்ளது.

சிறுவர் படுகொலைகள்

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களின் 900க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி குமாரி வழங்கியுள்ளார்.

எல்.ரி.ரி.ஈக்கு முன்னதாகவே ஜே.வி.பியினால் சிறுவர் வீரர்கள் (18 வயதிற்கு குறைந்தவர்கள்) உருவாக்கப்பட்டதாகவும், அதற்கு உதாரணம் 70 வயதுடைய ஐக்கிய தேசியக் கட்சி பெண்ணை கொலை செய்ய 13 வயது “கந்தலே போனிக்கி” என்ற சிறுவன் பயன்படுத்தப்பட்டைமை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், ஜே.வி.பியால் இன்னும் பல ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிறுவர்களை பயன்படுத்தி கொல்லப்பட்டதாகவும் அவர் ரோகிணி குமாரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

படலந்த விவாதம் 

அத்தோடு, தற்போதைய பட்டியலில் சேர்க்கப்படாத பெயர்கள் ஏப்ரல் மாதம் திட்டமிடப்பட்டுள்ள படலந்த விவாதத்தின் போது சமர்ப்பிக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதில் சேர்க்கப்பட வேண்டிய பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் குறித்த கூடுதல் தகவல்களைச் சமர்ப்பிக்குமாறு அவர் தனது முகநூல் பக்கத்தில் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version