Home இலங்கை அரசியல் செல்வம் எம்.பி உயிருக்கு அச்சுறுத்தல்: காவல்துறையில் முறைப்பாடு

செல்வம் எம்.பி உயிருக்கு அச்சுறுத்தல்: காவல்துறையில் முறைப்பாடு

0

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது உயிருக்கு அச்சுறுத்தல்
விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இந்தநிலையில், யாழ்ப்பாண காவல் நிலையத்தில் அவர் தனது முறைப்பாட்டையளித்துள்ளார்.

கனடாவில் வசிக்கும் நபர் ஒருவர் தொலைபேசி ஊடாக தனக்கு உயிர் அச்சுறுத்தல்
விடுத்துள்ளதாக தனது முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.

தவறான முடிவு

அத்தோடு , நீர்கொழும்பு பகுதியில் நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தொடர்பு இருப்பதாக
சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றது.

அத்தோடு , உயிரிழந்த நபருக்கும் , பெண்ணொருவருக்கும் மற்றும் நாடளுமன்ற உறுப்பினருக்கும் தொடர்பு
இருப்பதாக தனது யூடியூப் தளத்தில் கருத்துக்களை பதிவு செய்த யூடியூப்பர்
ஒருவருக்கு எதிராகவும் காவல்துறை முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

மன்னர் நகர சபை நகரபிதா, மன்னார் காவல் நிலையத்தில்
இந்த முறைப்பாட்டையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version