Home இலங்கை அரசியல் சிறீதரன் எம்.பிக்கு பாதுகாப்பு அவசியம் : சுமந்திரனின் கருத்தால் சர்ச்சை

சிறீதரன் எம்.பிக்கு பாதுகாப்பு அவசியம் : சுமந்திரனின் கருத்தால் சர்ச்சை

0

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு இனிவரும் காலங்களில் பாதுகாப்பு அவசியம் என எமது தலைமுறைக் கட்சியின் ஸ்தாபகர் சிதம்பரம் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

லங்காசிறியின் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயவாளரான எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் ஊடகம் ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போது தேசியப்பட்டியல் மூலம் தமக்கு நாடாளுமன்றத்திற்கு வர விரும்பவில்லை என்றும் யாராவது ஒரு உறுப்பினர் பதவி விலகினால் அல்லது மரணித்தால் குறித்த பதவிக்கு இரண்டாவதாக இருப்பவர் வரலாம் எனக் கூறியுள்ளார்.

குறிப்பாக சிறீதரன் எம்.பி விலகி விட்டால் நான் வரலாம் என்று கூறினார்.

இந்நிலையில் சுமந்திரனின் கருத்தானது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

சுமந்திரன் பதவிக்கு வருவதற்கு எது வேண்டுமானாலும் செய்யலாம்.

மேலும் தமிழரசுக் கட்சிக்குள் இருப்பவர்கள் தமது பதவிக்காக எது வேண்டுமாானலும் செய்வார்கள் என்றும் ஆகவே சிறீதரனுக்கு பாதுகாப்பு மிக அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்….

NO COMMENTS

Exit mobile version