நாட்டுமக்கள் ஒரு அபிலாசையில் அனுரகுமார திஷாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) வாக்களித்துள்ளனர் ஆகவே இந்த நாட்டுமக்களின் கஷ்டங்களை அறிந்து செயல்பட வேண்டும் என வலியுருத்துகிறோம்.
என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிதலைவரும்
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் (Velusami Radhakrishnan ) தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று (24.09.2024) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
மக்களின் எதிர்பார்ப்பு
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “நாட்டின் 09வது ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அனுரகுமார திஷாநாயக்க மக்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவேண்டும்.
கிராம மக்கள் மற்றும் மலையக பெருந்தோட்ட மக்கள்
எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் அவர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவரின் ஆட்சியின் ஊடாக நாட்டில் ஊழல் மோசடிகளை இல்லாதொழித்து நாட்டின்
நன்மைகளுக்காக செயற்பட வேண்டும் இவரின் சேவை மக்களுக்கு தேவை என்பதையும்
கூறிகொள்ள விரும்புகிறோம்.
இதுவரையிலும் எமக்கு தேசிய மக்கள் சக்தியில் இருந்து அழைப்பு எதுவும் இல்லை
ஜக்கிய மக்கள் சக்தியின் கட்சியில் நாங்கள் ஜனநாயக ரீதியாக செயற்பட்டு
வருகிறோம் இன்னும் இரண்டு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவிருக்கிறது.
ஜக்கிய மக்கள் சக்தியின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதை விரும்புகின்றேன்” என்றார்.
மேலும் புதிய ஜனாதிபதிக்கு தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.