Home இலங்கை சமூகம் மன்னார் வைத்தியசாலையில் மரணமான இளம் தாயின் வீட்டிற்கு சென்ற எம். பி

மன்னார் வைத்தியசாலையில் மரணமான இளம் தாயின் வீட்டிற்கு சென்ற எம். பி

0

மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாயாரான வனஜா மற்றும் அவரது சிசுவின் மரணத்தை தொடர்ந்து, அவர்களின் குடும்பத்தினரை பார்க்க நாடாளுமன்ற உறுப்பினர்
மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களது
இல்லத்திற்கு சென்றுள்ளார்.

அண்மையில் மன்னார் வைத்தியசாலைக்கு பிரசவத்திற்காக சென்ற இளம் தாயாரான வனஜா
மற்றும் அவரது சிசுவின் மரணம் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும்
ஏற்படுத்தியிருந்தது.

தற்போது இந்த விடயம் பேசுபொருளாகியுள்ள நிலையில், மன்னார் வைத்தியசாலைக்கு முன்பாக நேற்றையதினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இளம் தாய் மரணம்

இந்நிலையில், குறித்த தாயார் மற்றும் சிசுவின் குடும்பத்தினரை நாடாளுமன்ற உறுப்பினர்
மருத்துவர் ப.சத்தியலிங்கம் இன்று (23.11.2024) மன்னாரில் உள்ள அவர்களது
இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களிடம்
இவ்விடயம் தொடர்பில் தமக்கான நீதியினை பெற்றுத்தருமாறு கோரிக்கை
விடுத்திருந்தனர்.

இதேவேளை, எனது உயிரை பாதுகாக்க வடக்கில் இருந்து உடனடியாக இடமாற்றம் செய்ய கோரி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இன்றைய தினம் (22) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version