இலங்கை வரலாற்றில் ஆட்சி செய்த அரசாங்கங்களால் தமிழ் மக்களுக்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது எதிர்க்கட்சிகள் இனவாத அடிப்படையில் அதனை எதிர்த்து சிங்கள மக்களின் கவனத்தை பெற எத்தனித்துள்ளன.
இந்த அடிப்படையில் தான், வடக்கில் இராணுவ முகாம் அகற்றப்பட்டமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது அதிருப்தியினை வெளிப்படுத்தியிருப்பதாக அரசியல்துறை விரிவுரையாளர் கீத பொன்கலன் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கங்களை இனவாத அடிப்படையில் எதிர்க்கட்சிகள் எதிர்க்கும் பொறிமுறை இந்த அரசாங்கத்தின் ஆட்சியிலும் இடம்பெறும்.
எனினும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இந்த எதிர்ப்புகளை மீறி தமிழ் மக்களின் நலனுக்காக செயற்படுமா என்பதை பொறுத்திருந்துத் தான் அவதானிக்க வேண்டும்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கிறது அகளங்கம் நிகழ்ச்சி,