இலங்கையில்(sri lanka) இருந்து தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட முத்துராஜாவின் தந்தங்களை வெட்டுமாறு லாம்பாங் மாகாணத்தில் உள்ள தாய்லாந்து(thailand) யானைகள் பாதுகாப்பு மையத்தின் கால்நடை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலம் தொடும் வரை தந்தங்கள் வளர்ந்திருப்பதால், முத்துராஜா தனது அன்றாட பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே நீளத்தை குறைக்க முத்துராஜா நிற்கும் தாய்லாந்து யானைகள் பாதுகாப்பு மைய கால்நடை மருத்துவர்கள் பரிந்துரைத்ததாகவும் கூறப்படுகிறது.
தந்தங்களால் சிரமப்படும் முத்துராஜா
தந்தங்களின் வளர்ச்சியால் முத்துராஜாவின் கழுத்து எடையை தாங்க முடியாமல் சிரமப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு தந்தங்களின் எடையும் அதிகமாக இருந்ததால் முத்துராஜா கழுத்தை கீழே இறக்கியபடி நடந்து செல்வதாகவும் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
காயமடைந்த முத்துராஜா சிகிச்சைக்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.