Home இலங்கை அரசியல் அது பாட்டனாரின் எரிபொருள் நிலையம்: குற்றச்சாட்டை மறுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்

அது பாட்டனாரின் எரிபொருள் நிலையம்: குற்றச்சாட்டை மறுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்

0

அரசியல் செல்வாக்கின் மூலம், எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைக்க அனுமதி
பெற்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, எதிர்க்கட்சி நாடாளுமன்ற
உறுப்பினர்களான, கயந்த கருணாதிலக்க, ஹர்ஷன ராஜகருணா மற்றும் கிங்ஸ் நெல்சன்
ஆகியோர் இன்று மறுத்துரைத்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா(Arun Hemachandra) சுமத்திய
குற்றச்சாட்டுக்கே அவர்கள் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளனர்.

காலியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம், தாம் பிறப்பதற்கு பல
தசாப்தங்களுக்கு முன்னர் தமது மறைந்த பாட்டனாரால் வாங்கப்பட்டது.

குற்றச்சாட்டு மறுப்பு

இப்போது
அது, தமது சகோதரரால் நடத்தப்படுகிறது.

இந்தநிலையில், தாம் எதையும் பெற அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தியதில்லை
என்று கயந்த கருணாதிலக்க கூறினார்.

தமது பாட்டன் சில ஆண்டுகளுக்கு முன்பு எரிபொருள் நிரப்ப நிலையத்தை
வைத்திருந்தார், ஆனால் இப்போது தமது குடும்ப உறுப்பினர்கள் யாரிடமும்
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இல்லை என்று ஹர்ஷன ராஜகருணா கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நெல்சனும் எரிபொருள் நிரப்பு நிலையம் தொடர்பான
குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

சபாநாயகர், தம்மை போலவே பொலன்னறுவையை சேர்ந்தவர் என்பதால், அவர், தம்மை
பற்றி அறிந்திருக்கிறார் என்று அவர் கூறியமை குறிப்பிடத்தக்கது.

You May Like This


NO COMMENTS

Exit mobile version