Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை இரத்து செய்ய யோசனை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை இரத்து செய்ய யோசனை

0

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சகல சிறப்புரிமைகளையும் ரத்து செய்ய யோசனை முன்வைக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றில் தனிப்பட்ட பிரேரணையாக தாம் இந்த யோசனையை முன்வைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கௌரவ சேவை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் காலை மற்றும் பகலூணவு முழுமையாக நிறுத்தப்பட வேண்டுமென கோரியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளங்கள் ரத்து செய்யப்பட்டு இந்த சேவையை ஓர் கௌரவ சேவையாக அறிவிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்த வட்டியில் வழங்கப்படும் 10 மில்லியன் ரூபா கடன் இனி வழங்கப்பட கூடாது என கோரியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பாதுகாப்பு நீக்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.

வாடகை வீடுகள்

அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் வழங்கினால் வாடகை அடிப்படையில் வழங்க வேண்டும் எனவும் அந்த வாடகைத் தொகை மஹாபொல புலமைப்பரிசில் நிதியத்திற்கு வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்துள்ளார்.

காரியாலயங்களுக்காக வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபா தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாதிவெல பகுதியில் காணப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புக்களை பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதிகளாக மாற்றப்பட வேண்டுமென கோரியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான காப்புறுதி தொகையையும் ரத்து செய்ய வேண்டுமென கோரியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version