Home இலங்கை அரசியல் நீதித்துறையில் எம்.பிக்கள் தலையிட கூடாது! எச்சரிக்கும் சட்டத்தரணிகள் சங்கம்

நீதித்துறையில் எம்.பிக்கள் தலையிட கூடாது! எச்சரிக்கும் சட்டத்தரணிகள் சங்கம்

0

நீதித்துறையின் நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையூறு விளைவிக்க கூடாதென சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.   

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.  

நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறி சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டும், நீதிமன்றத்தின் உத்தரவை விமர்சித்தும் வருவதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

விமர்சிக்கப்படும் நீதித்துறை

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “நீதி அமைச்சர் உள்ளிட்ட மேலும் சில உறுப்பினர்கள் கடந்த 19 ஆம் திகதி நாடாளுமன்றில் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தனர்.

இவ்வாறான கருத்துக்கள் நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பாதிப்படைய செய்யும்.

அத்துடன், நீதித்துறையில் செயல்படும் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டால் அவர்களுக்கு எதிராக இலங்கையில் (Sri Lanka) நடைமுறையில் உள்ள சட்டத்துக்கமைய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும்.

மேலும், நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் சட்டத்தின் ஆட்சிக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதோடு, நீதித்துறையின் சுயாதீனத்தன்மையையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version