நடிகர் எம்.எஸ் பாஸ்கர்
காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வரும் எம்.எஸ்.பாஸ்கருக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். மகள் ஐஸ்வர்யா பாஸ்கர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார்.
பல முன்னணி ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசும் ஐஸ்வர்யா பாஸ்கர் 2021-ல் அகுள் சுதாகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பின், ஐஸ்வர்யா பாஸ்கர் கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு வளைகாப்பு நடைபெற்று அதன் புகைப்படங்களையும் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், தீபத்திருநாளான நேற்று ஐஸ்வர்யாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அதனை அவர் இன்ஸ்டா பக்கம் மூலம் அழகான புகைப்படத்தை பதிவிட்டு தெரிவித்துள்ளார்.
அழகிய புகைப்படம் இதோ,
Source: https://cineulagam.com/article/ms-baskar-became-grandfather-1730462922
