Home இலங்கை அரசியல் ஜனாதிபதியை அவமானப்படுத்திய அஜித் பி பெரேராவின் ஒழுங்குப் பிரச்சினை

ஜனாதிபதியை அவமானப்படுத்திய அஜித் பி பெரேராவின் ஒழுங்குப் பிரச்சினை

0

ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சும், இப்போது வேறு ஒரு பேச்சும் பேசுவதாக அஜித் பி பெரேரா ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து தெரிவித்தார்.  

நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் மஹ்மான் உரையாற்றும் போதே குறித்த ஒழுங்கு பிரச்சினை முன்வைக்கப்பட்டது.

இதன்போது, ஜனாதிபதி நாடாளுமன்றில் கூறுவது பொய்யான கருத்து எனவும் வெளியில் பேசுவதே உண்மையான கருத்து எனவும் கூறியிருந்ததை அஜித் பி பெரேரா விமர்சித்தார்.

பொருளாதார தடை

அதன் பின்னர் உரையை தொடர்ந்த முஜுபுர் மஹ்மான்,

“ஜனாதிபதி அன்று எதிர்க்கட்சியில் இருந்து பேசியதற்கு மாற்றமாக பேசுகிறார். நாம் அவரிடம் கதைக்கும் போது உண்மையை பேச வேண்டும்.

அவர்கள் இதற்கு முன்னர் வகித்த கொள்கையில் இருந்து மாறியிருக்கிறார். நாம் அதை வரவேற்கிறோம். அவர் சோசலிஷ வாதத்தில் இருந்து எமது கொள்கைக்கு வந்திருக்கிறார்.

பொருளாதாரத்தில் இருக்கும் தடைகளை அகற்ற வேண்டும். அவரின் பேச்சில் நாம் பல பொய்களை காண்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version