Home இலங்கை அரசியல் மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பு குறித்து முஜுபுர் வெளிப்படுத்திய தகவல்

மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பு குறித்து முஜுபுர் வெளிப்படுத்திய தகவல்

0

மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பு தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாகனங்கள் நிறுத்துமிடம் தனியார் நிறுவனத்தின் களஞ்சியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக

தொடர்ந்து பேசிய அவர், குறித்த வாகனம் நிறுத்துமிடம் தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது சட்டத்திற்கு முரணானது.

அது தொடர்பில் மாளிகாவத்தை தொடர்மாடி தொகுதி கட்டமைப்பு அலுவலகத்தில் முறைப்பாடு தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இரண்டு வருடங்களுக்கு இந்த களஞ்சியசாலை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் டீல் மூலம் இவை வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த காணிகள் மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பு வாசிகளின் பாவனைக்காக வழங்கப்பட வேண்டும்.

மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பு நிர்மாணிக்கப்படும் போது அங்கு வாழும் மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக அமைக்கப்பட்டதாகும்.இவற்றை மீண்டும் மக்களின் பாவனைக்காக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version