ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் முல்லைத்தீவு – பழையசெம்மலை,
நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் வருடாந்தம், தைத்திருநாளை முன்னிட்டு
இடம்பெறும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
இவை நேற்று (13.01.2025) நடத்தப்பட்டுள்ளன.
தைப்பொங்கல்
இந்த விசேட பூஜை வழிபாடுகளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா
ரவிகரன் பங்கேற்றுள்ளார்.
மேலும், நீராவியடிப் பிள்ளையாருக்கு விசேட
அபிஷேக பூசைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பிள்ளையாருக்கு குழைசோறு படையலிட்டு
மிகச் சிறப்பாக வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
அத்துடன், இந்த வழிபாடுகளில் செம்மலை மற்றும், செம்மலை கிழக்கு கிராம மக்கள்,
அடியவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.