Home இலங்கை சமூகம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : யாழில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் (காணொளி)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : யாழில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் (காணொளி)

0

முள்ளிவாய்க்கால்(Mullivaikkal) நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகாமையில் இரத்ததான முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்றைய தினம் (17.05.2025) இடம்பெற்றுள்ளது.

இலங்கைத் தமிழராலும், உலகத் தமிழராலும் ஆண்டு தோறும் மே 18 ஆம் நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவு கூறப்படுகின்றது.

2009 ஆம் ஆண்டில் இந்நாளிலேயே இலங்கையின் வட- கிழக்குக் கரையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் எனும் கிராமத்தில் ஈழப்போர் முடிவுற்றது.

இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகாமையில் இரத்ததான முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது

இந்த இரத்ததான முகாமானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டு வருகின்றது.

மக்கள் ஆர்வத்துடன் குறித்த இரத்ததான முகாமில் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்குவதை அவதானிக்க முடிகின்றது.

செய்திகள் :  யாழ் நிருபர் பு.கஜிந்தன்

 

https://www.youtube.com/embed/_Bwx2iWqpKE

NO COMMENTS

Exit mobile version