Home இலங்கை சமூகம் கொழும்பில் நீரில் மூழ்கும் ஆபத்தான நிலையில் 20க்கும் அதிகமான இடங்கள்!

கொழும்பில் நீரில் மூழ்கும் ஆபத்தான நிலையில் 20க்கும் அதிகமான இடங்கள்!

0

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில், அதிக மழையினால் நீரில் மூழ்கும் ஆபத்தான நிலையிலுள்ள 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஆமர்வீதி மற்றும் மற்றும் மருதானை டீன்ஸ் மாவத்தையை அண்மித்த பகுதிகள் அதிகளவில் நீரில் மூழ்குவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

காரணம்

இந்த நிலைமைக்கான காரணம், நீரை அகற்றுவதற்கான வடிகாண் கட்டமைப்பை அண்மித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களே என அந்த சபை சுட்டிகாட்டியுள்ளது.

மேலும், தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள, நீரில் மூழ்கும் இடங்களை சீர்செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version