மே 18 தமிழின அழிப்பு நினைவு நாளை முன்னிட்டு விசுவமடு பிரதேசத்தில் கடைகள் முழுமையான அடைக்கப்பட்டுள்ளதுடன் வீதிகள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தமிழினப்படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்திடைந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இறந்த உறவுகளிற்கு அஞ்சலி செய்வதற்ககாக எழுச்சி பெற்றுள்ளது.
கறுப்பு வெள்ளை கொடி
சம நேரத்தில் விசுவமடு நகரிலும் வீதிகள் கறுப்பு வெள்ளை கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு வாழை, கமுகு தளிர்களால் நகரம் மெரு கூட்டப்பட்டுள்ளது.
விசுவமடு நகரப்பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதோடு ஈகைச்சுடரேற்றி உயிர் நீத்தவர்களை அஞ்சலிக்கவும் அஞ்சலிப்பகம் ஒன்றையும் ஒழுங்கமைத்துளளனர்.
மேலும் நிகழ்வு ஏற்பாடுகள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதனை அவதானிக்க முடிவதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
செய்திகள் – நதுநசி
