Home இலங்கை அரசியல் யாழில் தமிழரசுக் கட்சி ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

யாழில் தமிழரசுக் கட்சி ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

0

புதிய இணைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இரண்டாம் நாள் நினைவேந்தலும் கஞ்சி வழங்கலும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வடமராட்சி கிளையினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

நெல்லியடி பேருந்து நிலையத்தில் வைத்து முள்ளிவாயக்கால் கஞ்சி காய்ச்சி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

முதலாம் இணைப்பு 

யாழ்ப்பாணத்தில் (Jaffna) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தமிழின அழிப்பு வாரத்தினை முன்னிட்டு மே 18 முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வானது இன்று (11.05.2025) யாழ். நல்லூர் தியாக தீபம் நினைவிடம் முன்பாக உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியது.

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வினை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்
பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் (Selvarajah Gajendran) ஆரம்பித்து வைத்தார்.

தமிழினப்படுகொலை நினைவுத்தூபி

இதேவேளை, கனடா (canada) பிரம்டனில் நிர்மாணிக்கப்படவுள்ள தமிழினப்படுகொலை நினைவுத்தூபி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

கனடாவின் பிராம்ரன் நகரின் சிங்கௌசி பொது பூங்காவில் நேற்று (10) 4.8 மீற்றர் உயரத்தில் உள்ள குறித்த உருக்கு நினைவுச்சின்னம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

உலகில் இடம்பெற்ற இனப்படுகொலைகளின் துன்பியல் வரலாற்றைக் கூறும் வரலாற்று அடையாளங்களில் ஒன்றாகவும் ஈழத்தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை உலகுக்கு கூறும் வகையிலும் குறித்த நினைவுச்சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version