Home இலங்கை அரசியல் பிரதியமைச்சர் முனீர் முளப்பருக்கு விரைவில் அமைச்சுப் பதவி

பிரதியமைச்சர் முனீர் முளப்பருக்கு விரைவில் அமைச்சுப் பதவி

0

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் அமைச்சரவையில் விரைவில் முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளது.

தேசிய மக்கள் அரசாங்கத்தின் தற்போதைய அமைச்சரவையில் எந்தவொரு முஸ்லிம் அமைச்சரும் இல்லை.

அக்கட்சியின் மூத்த முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முனீர் முளப்பர் (Muneer Mulaffar), தற்போதைக்கு தேசிய ஒருமைப்பாட்டு அலுவல்கள் பிரதியமைச்சராக கடமையாற்றுகின்றார்.

இந்நிலையில் விரைவில் அவரை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கவும், தற்போதைக்கு அவர் பிரதியமைச்சராக இருக்கும் தேசிய ஒருமைப்பாட்டு விவகாரங்கள் அமைச்சுப் பதவியை அவருக்கு வழங்கவும் உத்தேசித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

NO COMMENTS

Exit mobile version