Home இலங்கை பொருளாதாரம் 1,650 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் இருந்து விலகிய முரளிதரனின் நிறுவனம்

1,650 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் இருந்து விலகிய முரளிதரனின் நிறுவனம்

0

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் சிலோன் பெவரேஜ்
நிறுவனம், ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் மேற்கொள்ளவிருந்த 1,650 கோடிக்கும்
அதிகமான முதலீட்டில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முரளிதரனுக்கு சொந்தமான சிலோன் பெவரேஜ் நிறுவனத்திற்கு “இலவச நிலம்”
ஒதுக்கப்பட்டதற்கு, ஜம்மு காஷ்மீரில் சர்ச்சை எழுந்த நிலையிலேயே, முதலீட்டு
விலக்கல் செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில், தேசிய துறை தொழில்துறை கொள்கையின் கீழ் சலுகைகள்
காலாவதியானதால் இந்த விலகல் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர்

முன்னதாக, நேற்று ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி சட்டமன்ற
உறுப்பினர்கள் கதுவாவில் முரளிதரனின் பான உற்பத்தி நிறுவனத்திற்கு 26 ஏக்கர்
நிலம் ஒதுக்கப்பட்டது குறித்து அதிருத்தியை வெளியிட்டனர்.

 பிரதமரின் ஆவாஸ் யோஜனா (PMAY) கீழ் உள்ளூர்வாசிகளுக்கு வீட்டுவசதிக்கான நிலம்
மறுக்கப்பட்ட நிலையில், வெளியாட்களுக்கு நிலம் “இலவசமாக” ஏன் வழங்கப்பட்டது
என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

வணிக நோக்கங்களுக்காக நிலத்திற்கு விண்ணப்பிக்கும் எவருக்கும்
நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி நிலம் ஒதுக்கப்பட வேண்டும்,” என்று அவர்கள்
கூறினார்

அத்துடன், நில ஒதுக்கீட்டிற்காக கிரிக்கெட் வீரரின் நிறுவனத்திடமிருந்து எந்த
பணமும் வசூலிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இருப்பினும், அதிகாரப்பூர்வ பதிவுகள் நிலம் ஏக்கருக்கு 64 லட்சம் செலுத்தப்பட
வேண்டும் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த நிலையில், முரளிதரனின் நிறுவனம் பூனேவில், தமது உற்பத்தி ஆலையை நிறுவும்
என்று தகவல் வெளியாகியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version