Home இலங்கை குற்றம் இளைஞர் ஒருவரால் கொலை செய்யப்பட்ட நபர்! விசாரணையில் வெளியான காரணம்

இளைஞர் ஒருவரால் கொலை செய்யப்பட்ட நபர்! விசாரணையில் வெளியான காரணம்

0

மாரவில, கட்டுனேரிய புனித அந்தோணி மாவத்தை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கைது

இந்த கொலைச் சம்பவம் நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த கொலை தொடர்பில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலைக்கான காரணம்

இதேவேளை உயிரிழந்தவர் கட்டுனேரிய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவராவார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/murder-due-to-personal-dispute-1748920569

NO COMMENTS

Exit mobile version