Home சினிமா தமிழின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் படம் – திகில் கிளப்பும் மர்மர் 2வது லுக்

தமிழின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் படம் – திகில் கிளப்பும் மர்மர் 2வது லுக்

0

சர்வதேச அளவில் பெரும் பாராட்டை பெற்ற “பாராநார்மல் ஆக்டிவிட்டி” மற்றும் “தி பிளெய்ர் விட்ச் பிராஜெக்ட்” போன்ற திரைப்படங்களால் ஈர்க்கப்பட்ட சினிமா ரசிகர்களுக்கும், திரைப்பட ஆர்வலர்களுக்கும் பாராட்டு தெரிவிக்க இதுவே சரியான நேரம். ஃபவுண்ட் ஃபூட்டேஜ் (Found Footage) ஜானரில் எடுக்கப்பட்ட இதுபோன்ற திரைப்படங்கள் பலத்தரப்பட்ட ரசிகர்களுக்கு தலைசிறந்த திரை அனுபவத்தை வழங்கியுள்ளன. இந்த மாதிரி எடுக்கப்படும் திரைப்படங்கள் மொழி மற்றும் பிராந்திய எல்லைகளை கடந்து வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த வரிசையில், தற்போது தமிழ் சினிமாவும் இந்த அற்புத ஜானரில் இணைந்துள்ளது. தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக “மர்மர்” உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தின் அறிவிப்போடு வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளானதோடு, பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், முர்முர் திரைப்படத்தின் செகண்ட் லுக் தற்போது வெளியாகி புதிய அனுபவத்தை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது.

தமிழ் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம் என்ற வகையில் மர்மர் சாதனை படைக்க இருக்கிறது. இந்தப் படத்தை ஹேமந்த் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. இந்தப் படத்தின் செகண்ட் லுக் போஸ்டருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

புதுமையான படங்களை விரும்பும் சினிமா ரசிகர்களுக்கு மர்மர் சிறப்பான திரை அனுபவத்தை வழங்கும். கதாபாத்திரங்கள் வழியே ஆழமான மற்றும் மர்மங்கள் நிறைந்த கதையம்சம் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. உண்மைக்கும், கற்பனைக்கும் இடையில் உள்ள மெல்லிய கோட்டை அழிக்கும் வகையில், பிரத்யேக ஸ்டைல் மற்றும் நுணுக்கங்களை கொண்டு இந்தப் படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்க இருக்கிறது.

இந்தத் திரைப்படத்தை மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தின் நடிகர், நடிகைகள் விவரம் மற்றும் இதர அப்டேட்கள் வெளியாக உள்ளது.

தொழில்நுட்பக் குழு விவரம்:

ஒளிப்பதிவு: ஜேசன் வில்லியம்ஸ்

ஒலி வடிவமைப்பு: கெவின் ஃபிரடெரிக்

படத்தொகுப்பு: ரோஹித்

தயாரிப்பு வடிவமைப்பு: ஹாசினி பவித்ரா

சிறப்பு ஒப்பனை: செல்டன் ஜார்ஜ்

ஆடை வடிவமைப்பு: பிரகாஷ் ராமச்சந்திரன்

கலரிஸ்ட்: ரகுராமன்

மேலாளர்: நாகராஜன்

நிர்வாக தயாரிப்பாளர்: பிரவீன் குமார்

விளம்பர வடிவமைப்பு: தினேஷ் அசோக்

மக்கள் தொடர்பு: ஸ்ரீவெங்கடேஷ் 

NO COMMENTS

Exit mobile version