தனது தாயை கல்லால் தாக்கிக்கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கந்தேகெதர – சாரணியா தோட்டம் தங்கமலை பிரிவைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலில் காயமடைந்த பெண், கந்தேகெதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விளக்கமறியல் உத்தரவு
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட உயிரிழந்த பெண்ணின் மகனான 44 வயதுடைய சந்தேகநபர் பதுளை நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்து எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Source: https://tamilwin.com/article/murter-investigation-in-central-province-1719148657
