Home உலகம் திருச்சியில் புதிய விமான முனையம் திறப்பு: கொழும்பு வந்த முதல் விமானம்

திருச்சியில் புதிய விமான முனையம் திறப்பு: கொழும்பு வந்த முதல் விமானம்

0

இந்தியாவின் (india) திருச்சி விமான நிலையத்தில் (Tiruchirappalli International Airport) புதிதாக அமைக்கப்பட்ட பயணிகள் முனையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப ஒழுங்குபடுத்தல் பணிகள் முடிவடைந்து நேற்று (12.6.2024) முதல் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் ஆலயத்தின் ராஜகோபுரத்தினை பறைசாற்று வகையில் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளதுடன் இந்துசமயம் , தமிழர் கலாச்சாரம், இந்து கடவுள்களின் படங்கள், நடராஜர் சிற்பங்கள் பொறிக்கப்பட்டு இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

மோடியினால் திறந்து வைப்பு

திருச்சி விமான நிலைய புதிய முனையத்தின் ஊடாக முதல் விமானம் சிறிலங்கன் ஏா்லைன்ஸ் (SriLankan Airlines) விமானம் கொழும்பு நோக்கி அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டது.

மேலும், காலை 6.50 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து (Singapore) இண்டிகோ விமானம் முதலாவது விமானமாக திருச்சியில் தரையிறங்கிய போது இண்டிகோ விமானத்திற்கு நீர் விசிறி வரவேற்பளிக்கப்பட்டது.

புதிய முனையமானது 60,723 சதுர மீற்றர் பரப்பளவில் இந்திய ரூபா 1,112 கோடியில் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முனையமானது கடந்த ஜனவரி 2 ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் (Indian Prime Minister Narendra Modi) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version