Home இலங்கை குற்றம் இளம் பெண் கொடூரமாக கொலை: விசாரணைகளில் வெளியான தகவல்

இளம் பெண் கொடூரமாக கொலை: விசாரணைகளில் வெளியான தகவல்

0

மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெங்கிரிவத்த, சந்தானம்பிட்டிய பிரதேசத்தில் சட்டத்தரணி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த வழக்கில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிரிஹான – சந்தனம்பிட்டிய பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று காலை சந்தேகநபரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

35 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான சட்டத்தரணி,  கொல்லப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

நீதிமன்றத்தில் வழக்கு

இவர் முதல் திருமணத்திலிருந்து விவாகரத்து பெற்று சந்தேகநபருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் குறித்த பெண்ணை பல்வேறு வழிகளில் துன்புறுத்தியுள்ளதாகவும், இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

NO COMMENTS

Exit mobile version