Home இலங்கை அரசியல் இலங்கையில் ஆட்சியில் இருந்த போதே தோற்கடிக்கப்பட்ட ஜனாதிபதிகள்

இலங்கையில் ஆட்சியில் இருந்த போதே தோற்கடிக்கப்பட்ட ஜனாதிபதிகள்

0

ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சியில் இருந்த போதே தோற்கடிக்கப்பட்ட ஜனாதிபதிகளில் ரணில் விக்ரமசிங்கவும் ஒருவராக மாறியுள்ளார்.

நடந்து முடிந்த ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கும் தனித்துவமான விடயமாக இது மாறியுள்ளது.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஆட்சியில் இருக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோல்வி அடைந்தார்.

தோல்வியடைந்த ஜனாதிபதிகள்

இந்தத் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன பாரிய வெற்றியை பதிவு செய்திருந்தார்.

மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.

அரசியலமைப்பை திருத்தியமைத்து மூன்றாவது தடவையாக போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச போட்டியிட்டமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

பதவி வெற்றிடம்

அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகலால் வெற்றிடமாக இருந்த இடத்திற்கு ஜனாதிபதி பதவிக்கு வந்த ரணில் விக்ரமசிங்கவும் இணைந்துகொண்டார்.

மக்கள் வாக்குகளால் அல்லாமல் அரசியலமைப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அதற்கமைய, நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சியில் இருந்தபோது தோற்கடிக்கப்பட்ட ஜனாதிபதிகளின் பட்டியலில் மகிந்தவுடன், ரணிலும் ரணில் இணைந்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version