Home இலங்கை அரசியல் புதிய அரசின் ஆட்சிமாற்றத்திற்கு பின்னரும் தொடரும் விசாரணைகள்..!

புதிய அரசின் ஆட்சிமாற்றத்திற்கு பின்னரும் தொடரும் விசாரணைகள்..!

0

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் மூலம் விடுதலை செய்யப்பட்ட போதிலும் புதிய ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார். 

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (24) இடம்பெற்ற ஊடக
சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “மலையகம், மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இதன் காரணமாக, அவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதுடன் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் மனதளவிலும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 

எனவே, இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது தொடர்பில் பொறுப்பு கூறப்பட வேண்டும்” என கூறியுள்ளார். 

மேலும் தெரிவித்துள்ளதாவது, 

NO COMMENTS

Exit mobile version