யுவன் ஷங்கர் ராஜா
தமிழ் சினிமாவில் தனது இசையினால் தனக்கென்று மாபெரும் ஒரு இடத்தை பிடித்திருப்பவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.
இளையராஜாவின் மகனான இவர் 1997ல் அரவிந்தன் எனும் படத்தின் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக என்ட்ரி கொடுத்தார். ஆனால், ஆரம்பகாலகட்டத்தில் சில திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தரவில்லை.
அஜித் நடிப்பில் வெளிவந்த தீனா திரைப்படத்தின் மூலம் தான் யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இப்படம் இவருடைய திரை வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாக அமைந்தது.
இதன்பின் நந்தா, துள்ளுவதோ இளமை, புதுப்பேட்டை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, சண்டக்கோழி, வல்லவன், மன்மதன் என தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களுக்கு இசையமைத்து புகழின் உச்சத்திற்கே சென்றார்.
சல்மான் கானின் செக்யூரிட்டி.. இத்தனை கோடியில் கார் வாங்கி இருக்கிறாரா?
மேலும் இவர் இசையில் தற்போது பிரமாண்டமாக தளபதி விஜய்யின் GOAT திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில், இன்று யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாள் என்பதால் GOAT படத்திலிருந்து ஸ்பெஷல் பாடல் வெளியாகிறது.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், யுவன் ஷங்கர் ராஜாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 125 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. இவர் ஒரு படத்திற்கு இசையமைக்க ரூ. 2 கோடி முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். மேலும் ரூ. 10 கோடி மதிப்பிலான பங்களாவுக்கு இவருக்கு சொந்தமாக இருக்கிறது என சொல்லப்படுகிறது.