Home உலகம் விலங்குடன் நாடுகடத்தப்படும் குடியேற்றவாசிகள் : எலோன் மஸ்க் நையாண்டி

விலங்குடன் நாடுகடத்தப்படும் குடியேற்றவாசிகள் : எலோன் மஸ்க் நையாண்டி

0

அமெரிக்காவில்(us) சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை விலங்குடன் நாடு கடத்தும் புதிய காணொளியை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த காணொளியை பகிர்ந்த எலோன் மஸ்க்(elon musk), ’ஹாஹா வாவ்’ என்று பதிவிட்டுள்ளார்.

இவர் பகிர்ந்த கருத்து, பல்வேறு நாட்டு மக்களிடையே எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் நாடு கடத்தல்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பல்வேறு வெளிநாட்டினரை கண்டறிந்து, அவர்களை ட்ரம்ப் (trump)தலைமையிலான நிர்வாகம் நாடு கடத்தி வருகின்றது.

கடந்த இரண்டு வாரங்களில் மூன்று அமெரிக்க இராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்ட 332 இந்தியர்கள், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்துக்கு வந்தடைந்தனர்.

இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட அனைவரின் கை மற்றும் கால்களை விலங்கால் கட்டிய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

 எலோன் மஸ்க் கிண்டல்

இந்தியர்களை ஏலியன் எனக் குறிப்பிட்டு, கை, கால்களில் விலங்கிடப்பட்டிருக்கும் காணொளியை அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படை வெளியிட்டு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு பயணம் செய்த 40 மணிநேரத்துக்கும் மேலாக தங்களின் கை, கால்கள் விலங்குகளால் கட்டப்பட்டிருந்ததாகவும், உணவு சாப்பிடகூட கை விலங்குகள் அகற்றப்படவில்லை என்றும் இந்தியா வந்தடைந்தோர் வேதனை தெரிவித்தனர்.

NO COMMENTS

Exit mobile version