Home இலங்கை அரசியல் தையிட்டி சர்வாதிகார விகாரை இடிக்கப்பட வேண்டும்: சிறீதரன் எம்.பி அதிரடி..!

தையிட்டி சர்வாதிகார விகாரை இடிக்கப்பட வேண்டும்: சிறீதரன் எம்.பி அதிரடி..!

0

தற்போதைய ஜனாதிபதி அநுர கூறியதை போன்று சட்டம் அனைவருக்கும் சமமானது என்றால் தையிட்டி விகாரை உடைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (S.Shritharan) தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்றையதினம் (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தையிட்டி விகாரை 

அவர் மேலும் தெரிவிக்கையில்,“ விகாரையை உடைக்க வேண்டும் என தான் கூறியமை இனவாத கருத்து அல்ல.

சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்ற அடிப்படையில் இதுவே தீர்வு.

தையிட்டி காணி விவகாரம் குறித்து எதிர்வரும் பௌர்ணமி நாளன்று தையிட்டி காணி உரிமையாளர்கள் முன்னெடுக்கவுள்ள போராட்டத்தில் நானும் கலந்துக்கொள்ளவுள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார். 

https://www.youtube.com/embed/o_9Vm982cQU

NO COMMENTS

Exit mobile version