சஜித் பிரேமதாச(sajith premadasa) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக இருக்கும் வரை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்திக்கான (SJB) தனது ஆதரவைத் தொடரும் என்று அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்(rauf hakeem) உறுதிப்படுத்தினார்.
அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்களில் நிர்வாகக் கட்டுப்பாட்டை உருவாக்குவதற்கு ஆதரவைக் கோரி, தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனது கட்சியைத் தொடர்பு கொண்டுள்ளனர் என்பதை அவர் மேலும் தெரிவித்தார்.
ஹக்கீமின் அறிவிப்பு
அண்மைய சில நாட்களாக ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்கள் தொடர்ச்சியாக தமது அமைப்பாளர் பதவியிலிருந்து விலகி வருகின்றனர்.இது கட்சிக்குள் பாரிய பிரச்சனையை தோற்றுவித்துள்ள நிலையில் ஹக்கீமின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
