Home இலங்கை அரசியல் யூடியூப்பில் உழைப்பதற்காக அர்ச்சுனா செய்யும் இழிவான செயல்! கொந்தளிக்கும் முஸ்லிம் எம்.பிக்கள்

யூடியூப்பில் உழைப்பதற்காக அர்ச்சுனா செய்யும் இழிவான செயல்! கொந்தளிக்கும் முஸ்லிம் எம்.பிக்கள்

0

இதுவரை காலமும் இருந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களது உரிமைகளுக்காக குரல் கொடுத்திருக்கும் நிலையில், தற்போது வந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இதற்கு மாறாக, யூடியூப்பில் உழைப்பதற்காக முஸ்லீம் சமூகத்தை தவறாக சித்தரிக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் (S. M. Marikkar) எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

சமயங்கள் தொடர்பாக விமர்சனங்களை முன்வைக்கும் போது அதனை ஆதாரத்துடன் சபையில் முன்வைக்க வேண்டும்.

எந்தவொரு அரசியல்வாதிக்கும் உரிமை இல்லை

முஸ்லீம் பெண்ககுக்கு பிரச்சினைகள் ஏற்படுவதாக கூறுகின்றார். அர்ச்சுனா முதலில் இஸ்லாத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.

யூடியூப்பில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் அவர் இதை விட வேறு விடயங்களைக் கூறி அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.

மேலும், எந்த சமயமாக இருந்தாலும் அதிலுள்ள அடிப்படைக் கூறுகளை மாற்றி அமைப்பதற்கு எந்தவொரு அரசியல்வாதிக்கும் உரிமை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version