Home இலங்கை சமூகம் முத்தையன்கட்டு இராணுவ முகாமில் ஐந்து இளைஞர்கள் விவகாரத்தில் சிக்கிய பகீர் காணொளி

முத்தையன்கட்டு இராணுவ முகாமில் ஐந்து இளைஞர்கள் விவகாரத்தில் சிக்கிய பகீர் காணொளி

0

முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்ட ஐந்து தமிழ் இளைஞர்கள்  தாக்குதலுக்குள்ளான சம்பவமானது தமிழர் பகுதிகளில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 7ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் இராணுவமுகாமிலுள்ள தகரங்களை கழற்ற வேண்டும் என்று கூறி இந்த இளைஞர்களை இராணுவத்தினர் அழைத்துள்ளனர்.

மூன்று இராணுவத்தினரின் தொலைப்பேசி இலக்கங்களிலிருந்து குறித்த இளைஞர்களின் தொலைப்பேசிக்கு அழைப்பு சென்றுள்ளது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அங்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இளைஞர்களின் வாக்கு மூலங்களை தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லை.

எனினும் இந்த சம்பவம் இடம்பெற்ற போது நள்ளிரவில் காணொளியொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தவிடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…

NO COMMENTS

Exit mobile version