ஆயுர்வேதத்தை மருத்துவ விஞ்ஞானமாக அங்கீகரிப்பதே தனது நோக்கமாகும் என
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
அதற்காகவே ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து
வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக பாரம்பரிய வைத்தியர்களையும் ஒன்றிணைக்க வேண்டும். அவர்களுக்கும்
அங்கீகாரம் வழங்க வேண்டும். அதே சமயம் ஜோதிடத்தையும் இதனுடன் இணைக்க
வேண்டும்.
இவை அனைத்தும் பின்னிப் பிணைந்தவை. இவற்றை பிரிக்க முடியாது. அதற்கு
அமைவாக புதிய கட்டமைப்பைத் உருவாக்க வேண்டும்.
இந்தத் துறைகள் அனைத்தையும்
அங்கீகரித்து அவற்றைப் பதிவு செய்ய புதிய சடடமொன்றை கொண்டு வர
எதிர்பார்க்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..