கொழும்பு (Colombo) பிரதான நீதவான் நீதிமன்றத்தின் ஆவண அறையில் வைக்கப்பட்டிருந்து 24 கோடி ரூபா பெறுமதியான 12 கிலோ ஹெரோயி போதைப்பொருள் மாயமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த அறையில் உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றிற்கு சமர்பிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 12 கிலோ ஹெரோயின் போதைப்பொருளையும் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவுள்ளதாக காவல்துறை வேடமணிந்த ஒருவர் எடுத்த சென்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று இரகசிய காவல்துறை பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
விசாரணை
அத்தோடு, ‘தரிந்து யோசித’ என அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த சந்தேகபர், என்பதை கண்டறிய உடனடி விசாரணை நடத்துமாறும் நீதவான் பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றின் வழக்கு அறையில் பணியாற்றிய அதிகாரிகளிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.