Home இலங்கை அரசியல் வரிய மக்கள் யார் என்பதையே இனங்காணாத அரசாங்கம்: சஜித் சாடல்!

வரிய மக்கள் யார் என்பதையே இனங்காணாத அரசாங்கம்: சஜித் சாடல்!

0

வறுமையை ஒழிப்பதாக அரசாங்கம் கூறியபோதும் வரிய மக்கள் யார் என்பதை இனம் கண்டு
கொள்ளவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

கொழும்பு (Colombo) சினமன் லேக்சைட் விருந்தகத்தில் ‘சஜித் உடன்
சமுர்த்தி சக்தி’ என்ற விசேட மாநாடொன்றில் இன்று(29) கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “அதனை சரியாக அறிந்து கொள்வதற்கு சனத் தொகை மற்றும்
புள்ளிவிபரவியல் கணிப்பீட்டு திணைக்களத்தினாலும் அதனை அறிந்து கொள்ள முடியாமல்
போயுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி

இதனை சரியாக அறிந்து கொள்ளாமல் அஸ்வெசும (ASWESUMA) வேலைத்திட்டத்தை
முன்னெடுத்தமையால், 8 இலட்சம் பேருக்கான நிவாரணம் இல்லாமல் போயிருக்கின்றது.
இந்த வேலை திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்பு அறிவியல் ரீதியாக வறுமைக்கோடு
குறித்து கணக்கிடப்பட வேண்டும்.

இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்திடம் உறுதியான செயற்பாடுகள்
இல்லை என்றாலும், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களில்
பெரிய தொகையொன்று வழங்கப்பட்டு, அதனைப் பயன்படுத்தி வறுமையிலிருந்து மீண்டு
வர வேண்டும்.

தொடர்ந்தும் இந்த நிவாரணங்கள் கிடைக்கப் பெறாது. வங்கரோத்தடைந்த
நாட்டில் வறியவர்கள் அதிகமாக இருப்பார்கள் என்றால் மீண்டு வர முடியாது. எனவே
வறுமையை இல்லாது ஒழிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வரிய மக்கள்

எமது நாட்டில் வறுமையை போக்கும் புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதோடு
தொடர்ந்தும் மக்களை  அவ்வாறு இருக்க விடாமல், குறிப்பிட்ட காலத்துக்குள்
வறுமையை ஒழித்து மக்களை மீட்டெடுக்கும் பாரிய தேசிய அளவிலான வேலை திட்டங்களை
முன்னெடுக்கும் சேர்ப்பாடாக கருதலாம்.

70, 80 ஆம் ஆண்டுகளில் வரிய
மக்களுக்கு நிவாரண முத்திரைகளை வழங்கியதோடு, வறுமையில் இருந்து மீட்சி
பெறுவதற்கு காணப்பட்ட ஒரே வேலைத்திட்டமும் இதுவாகும் என்றும் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் ஜனசவிய ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சமூர்த்தி,
கெமிதிரிய, அஸ்வெசும, திவிநெகும போன்ற வறுமை ஒழிப்பு வேலை திட்டங்கள்
ஆரம்பிக்கப்பட்டன” என்றார்.

NO COMMENTS

Exit mobile version