Home இலங்கை சமூகம் கொழும்பு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்ம பொருள் – ஆய்வு நடத்தும் பொலிஸார்

கொழும்பு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்ம பொருள் – ஆய்வு நடத்தும் பொலிஸார்

0

கொழும்பின் புறநகர் பகுதியான  மொரட்டுவ கடலில் மிதந்து வந்த மர்மான சாதனத்தின் ஒரு பகுதியை பொது மக்களின் உதவியுடன் கரைக்கு கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொரட்டுவ, கொரலவெல்ல, ஷ்ரமதான மாவத்தைக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் இந்த மர்ம சாதனம் மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வட்ட வடிவ சாதனத்தின் நடுவில் ஒரு சிறிய சுற்று மற்றும் கையடக்க தொலைபேசிகளை போன்ற நான்கு சிறிய சோலார் பேனல்கள் உள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் சந்தேகம்

அது ஏதேனும் ஒரு சாதனத்தில் இணைக்கப்பட்ட நிலையில் கழன்று விழுந்த பிறகு கடலில் மிதந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version