Home இலங்கை அரசியல் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : கண்டன வெளியிட்டுள்ள யாழ்.சர்வமதப் பேரவை

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : கண்டன வெளியிட்டுள்ள யாழ்.சர்வமதப் பேரவை

0

யாழ்.செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சி
விவகாரம் அதிர்ச்சிக்குட்படுத்தியுள்ளதுடன், இதற்கு எமது கண்டனத்தைத் தெரிவிக்கிறோம் என யாழ்ப்பாணம் மாவட்ட சர்வமதப் பேரவையின் கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மனித வாழ்க்கை, எமது சமய விழுமியங்களின்படி, மாண்புமிக்கது. அதனை மதிப்புடன்
நோக்குவதும் அறம் மைய ஆன்மீகத்துடன் வாழ்க்கையை வாழவேண்டும் என்பதை, இஸ்லாம்,
கிறிஸ்தவம், இந்து சமயம் மற்றும் பௌத்தம் தெளிவாக விளக்கியுள்ளது.

நீதி கிடைக்க முழு ஒத்துழைப்பு

அன்புடனும்
நல்லெண்ணத்துடனும் வாழ வேண்டிய நாம், எம்மவரது எலும்புகளை செம்மணி உட்பட பல
இடங்களிலும், மனித புதைகுழிகளிலிருந்து அகழ்ந்து எடுக்கிறோம் என்பது மிகமிக
வேதனைக்குரியது.

இது கடவுளுக்கு எதிரான, சமய விழுமியங்களுக்கு எதிரான கொடுமையான செயல். இந்தக்
கொடுமையுடன் தொடர்புபட்டவர்கள் அனைவரும் நீதியின் முன்கொண்டு வரப்பட்டு உரிய
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மன்றின் 46/1 தீர்மானத்தின்படி,
இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்
தொடர்பான ஆதாரங்களைக், காலம் தாழ்த்தாது. விரைவாகச் சேகரிக்க உரிய
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்.

“காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், இந்த புதைகுழிகளுக்குள் எமது உறவுகள்
உள்ளனரா?” எனும் கேள்வியை எழுப்புவதை சர்வதேச சமூகம், இலங்கையில் வாழ்வோர்
அனைவரும் தெளிவாக செவிமடுத்து, அவர்களுக்கு நீதி கிடைக்க முழு ஒத்துழைப்பை
வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

எமக்குத் தெரியவந்துள்ள அனைத்து மனித
புதைகுழிகளையும் மீளப்பார்ப்பதும், சர்வதேச கண்காணிக்கப்புடன் அகழ்வாராய்ச்சி
மிக வேகமாக நடைபெறவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version